TNPSC Thervupettagam

ஆர்டி-விளக்கை அடிப்படையாகக் கொண்ட சோதனை

May 29 , 2020 1516 days 646 0
  • அறிவியல் மற்றும் தொழில்துறை மையத்தின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான இந்திய நிறுவனம்  (CSIR-IIIM/Council of Scientific & Industrial Research - Indian Institute of Integrative Medicine) மற்றும் ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனம் ஆகியவை இணைந்து கொரானா வைரஸ் நோய்த் தொற்றிற்காக இந்தச் சோதனையை உருவாக்கியுள்ளன.
  • ஆர்டி-விளக்குச் சோதனை என்பது தலைகீழ் டிரான்ஸ்கிரிப்டேஸ்-வளையத்தை மையமாகக் கொண்டுள்ள  மத்திய சமவெப்பப் பெருக்கம் என்பதைக் குறிக்கின்றது.
  • உட்கரு அமிலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தச் சோதனையானது நோயாளிகளின் நாசி மற்றும் தொண்டைச் சளி மாதிரியிலிருந்து மேற்கொள்ளப் படுகின்றது. 
  • தற்பொழுது கோவிட் – 19 சோதனையானது நிகழ்நேர – பிசிஆர் மூலம் மேற்கொள்ளப் படுகின்றது. இதன் உபகரணங்கள் அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் படுகின்றன.
  • மேலும் இது அதிக செலவு மிக்கதாகவும், அதிக மனித சக்தி தேவைப்படுவதாகவும் உள்ளது.
  • மறுபுறம், ஆர்டி-விளக்குச் சோதனையானது குறைந்தபட்ச நிபுணத்துவத்துடன் அடிப்படை ஆய்வக அறிவுடன் ஒற்றைக் குழாயைக் கொண்டு மேற்கொள்ளப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்