TNPSC Thervupettagam

ஆர்டிக் கடலின் பனி கணித்ததை விட வேகமாக உருகி வருகிறது.

October 30 , 2017 2583 days 895 0
  • பனிமண்டலக் காலநிலை ஆராய்ச்சிக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி, ஆர்டிக் கடலின் உறைபனி கணித்ததை விட வேகமாக உருகி வருகிறது.
  • ஆர்டிக் கடலின் பனியானது காலநிலை மாற்றத்தின் முக்கியக் குறியீடாகும்.
  • உருகுவதால் குறைந்து வரும் உறைபனி மூடலானது உறைபனியின் மீது  பட்டு  வளிமண்டலத்திற்கு எதிரொலிக்கும் சூரியக்கதிர்களின்  அளவில் குறைப்பையும், சூரியக்கதிர்களின் உட்கிரகித்தலையும் அதிகரிக்கும்.
  • இது எல் –நினோ போன்ற வானிலை நிகழ்வுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பெருங்கடல்களின் வெப்பமடைதலை விரைவுப்படுத்தும்.
  • எல்-நினோ ஆசியாவிற்கான பருவக்காற்றில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.
  • உருகி வரும் பனியானது, பனிக்கரடிகள், நீர் நாய்கள் மற்றும் மிதவைத்தாவர நுண்ணுயிர்கள் போன்றவற்றின் உயிர்வாழ்தலுக்கான  சூழலை கடினமாக்கிவிடும்.
  • உப்புப்பனி அமைந்திருப்பதன் காரணமாக,பல ஆண்டுகளாக ஆர்டிக் கடல் பனியின் தடிமன் 25% என்ற அளவிற்கு செயற்கைக்கோள் அளவீடுகளால் அதிகமாகக் கணக்கிடப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • உப்புப் பனியானது செயற்கைக்கோளிலிருந்து வரும் தொலையுணர்வு ரேடார் அலைகளை ஊடுருவ அனுமதிக்காத காரணத்தால் முரண்பாடான அளவீடுகளுக்கு வழிவகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்