TNPSC Thervupettagam

ஆர்டிக் பிரதேசத்திற்கு முதல் நெடுஞ்சாலை - கனடா

November 19 , 2017 2590 days 847 0
  • கனடா தனது முதல் நிரந்தரமான, ஆண்டு முழுவதும் பயன்படுத்தத்தக்க ஆர்டிக் பெருங்கடலுக்கான முதல் நெடுஞ்சாலையை அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது.
  • இந்தப் புதிய நெடுஞ்சாலை இணைப்பின் மூலம் கனடா அதன் மூன்று கடற்கரைகளான அட்லாண்டிக், ஆர்டிக், பசுபிக் என அனைத்து கடற்கரைகளுடனும் நிலம் வழியாக இணைக்கப்படும்.
  • 138 கி.மீ. (85 மைல்கள்) நீளமுடைய இந்த அனைத்து வானிலைகளிலும் பயன்படுத்தத்தக்க நெடுஞ்சாலை கனடாவின் யுகோன் பகுதியில் தொடங்கி வடகடலோர எல்லை வரை அமைந்துள்ளது.
  • இந்தப் புதிய நெடுஞ்சாலையானது இதற்கு முன் வான் வழியாக அல்லது பனிக்கால சாலைகள் வழியே மட்டுமே அடையத்தக்க நிலையிலிருந்த ஆர்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள கனடாவின் டுக்டோயக்டுக் எனும் குக்கிராமத்தை தென்கனடியப் பகுதிகளுடன் இணைக்க வல்லது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்