TNPSC Thervupettagam
November 22 , 2022 608 days 411 0
  • சந்திரனை நோக்கிய ஆய்வுப் பயணத்தில் இதுவரையில் உருவாக்கப்பட்ட மிக சக்தி வாய்ந்த ஏவுகலத்தினை நாசா விண்ணில் ஏவ உள்ளது.
  • இந்த ஏவுதலானது, அமெரிக்க விண்வெளி முகமையின் ஆர்ட்டெமிஸ் என்ற புதிய முதன்மைத் திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
  • அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்த 32 அடுக்கு உயரமான விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) விண்ணில் ஏவப்பட்டது.
  • ஆர்ட்டெமிஸ் 1 என்ற ஒரு கலத்தின் உச்சியில் விண்வெளி வீரர்கள் அற்ற ஓரியன் விண்கலம் பொருத்தப் பட்டுள்ளது.
  • ஆர்ட்டெமிஸ் 1 கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டப் பிறகு, ஆர்ட்டெமிஸ் 2 கலமானது, 2024 ஆம் ஆண்டில் விண்வெளி வீரர்களுடன் நிலவினை நோக்கி விண்ணில் ஏவப்படும்.
  • அதே சமயம் ஆர்ட்டெமிஸ் 3 கலமானது 2025 ஆம் ஆண்டிற்கு முன்பாகவே சந்திர மண்ணில் தடம் பதிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்