2035 ஆம் ஆண்டிற்குள் நமது புவிக்கு அருகில் உள்ள வேற்றுக் கிரக அண்டை கோளான செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
செவ்வாய்க் கிரகத்திற்கான பயணத்திற்கு 6 முதல் 7 மாதங்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப் படுவதோடு இது சுமார் 402 மில்லியன் கிலோமீட்டர் தூரம் வரையிலான பயணமாகவும் இருக்கும்.
செவ்வாய்க் கிரகம் ஆனது 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான அதே காலக் கட்டத்தில் தான் நமது சூரியக் குடும்பம் தோன்றியது.
இதில் ஏராளமான திரவ வடிவ நீர் மற்றும் அடர்த்தியான வளிமண்டலம் இருந்ததால் இந்த செந்நிறக் கோள் ஆனது பூமியைப் போன்றே இருந்தது.