வங்காளதேசம் ஆனது சமீபத்தில் ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் கையொப்பமிட்ட 54வது நாடாக மாறியுள்ளது.
இது நிலவின் மேற்பரப்பில் நீண்டகாலக் குடியிருப்புகளை உருவாக்கி அதன் மூலம் செவ்வாய்க் கிரகத்திற்கு முன்னேறும் சில திட்டங்களுடன் நிலவினை நன்கு ஆய்வு செய்திடச் செய்வதற்கான அமெரிக்கா தலைமையிலான ஒரு முன்னெடுப்பாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மிகவும் அதிகரிக்கவும் பூமியின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள களத்தை ஆராயவும் இந்தியா 2023 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த திட்டம் ஆனது நிலவின் சுற்றுப்பாதையிலும் மேற்பரப்பிலும் நிரந்தர இருப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.