கேரளாவின் தென்மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புதிய ஊசித் தட்டான் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புனேவில் உள்ள MIT-உலக அமைதிப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பூச்சி இனத்திற்கு ‘ஆர்மகெடான் ரெட்டெய்ல்’ அல்லது புரோட்டோஸ்டிக்டா ஆர்மகெடோனியா என்று பெயரிட்டுள்ளனர்.
பரவலான வாழ்விட இழப்பு மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக இந்தப் பூச்சிகளின் எண்ணிக்கையில் ஏற்படும் உலகளாவிய வீழ்ச்சி குறித்த கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
'சூழலியல் ஆர்மகெடோன்' என்ற சொல்லானது, உலகெங்கிலும் உள்ள பல்வேறு பூச்சி இனங்களின் எண்ணிக்கையின் அழிவுகரமான வீழ்ச்சியை விவரிக்கப் பயன்படுத்தப் படுகிறது.
இந்தப் பூச்சிகள் மகரந்தச் சேர்க்கை, சுழற்சி முறை ஊட்டச்சத்து மற்றும் பிற விலங்குகளுக்கு உணவை வழங்குதல் ஆகியவற்றின் காரணமாக பூச்சிகளின் பேரழிவு என்றும் அழைக்கப்படும் இந்த நிகழ்வானது முழு அளவிலான சுற்றுச்சூழல் அமைப்புகளையும் பாதிக்கிறது.