TNPSC Thervupettagam

ஆர்மீனியா – அசர்பைஜான் பிரச்சினை

October 6 , 2020 1421 days 660 0
  • நகோர்னோ-காராபாக் பகுதி மீதான ஆர்மீனியா-அசர்பைஜான் ஆகியவற்றிற்கிடையேயான நிலப் பிரச்சினையானது கடும் தாக்குதல்களுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.
  • ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை டிரான்ஸ்காகசியா அல்லது தெற்கு காகசியாவின் ஒரு பகுதியாகும்.
  • இது ஏறத்தாழ, கடந்த 40 ஆண்டுகளாக நகோர்னோ காராபாஹ் பகுதி மீதான நிலப் பிரச்சினை காரணமாக மூடப்பட்டுள்ளது.
  • நகோர்னோ-காராபாஹ் பகுதியானது 95% மக்கள் தொகையாக ஆர்மீனிய இன குடிமக்களைக் கொண்டுள்ளது.
  • இது அந்தக் குடிமக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆனால் இது சர்வதேச அளவில் அசர்பைஜானின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்தப் பிரச்சினையானது முதன்முதலில் 1988 ஆம் ஆண்டில்  தொடங்கியது. அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மனித உரிமை விதிமீறல்கள், கடுமையான அகதிப் பிரச்சினைகள் ஆகியவற்றை அது ஏற்படுத்தியது.
  • இதனைத் தொடர்ந்து, ஆர்மீனியா நாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத நகோர்னோகாராபாஹ் குடியரசு ஆகியோரினால் 1994 ஆம் ஆண்டில் பிஸ்கேக் நெறிமுறை எனப்படும் ஒரு தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தமானது கையெழுத்து இடப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.  
  • பிஸ்கேக் நெறிமுறைனது கிர்கிஸ்தானின் தலைநகரான பிஸ்கேக்கில் 1994 ஆம் ஆண்டில் மே 05 அன்று கையெழுத்திடப்பட்டது.
  • நாகோர்னோகாராபாஹ் பகுதியானது சர்வதேச அளவில் அசர்பைஜானின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் இது ஆர்மீனியா குடிமக்களால் கட்டுப்படுத்தப் படுவதன் காரணமாக பிரச்சினைக்குரியதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்