TNPSC Thervupettagam

ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி மையம் – மயங்கு பொருள் நிறமாலை வரைவி

March 9 , 2021 1267 days 599 0
  • இந்திய விஞ்ஞானிகள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, குறைந்த விலையுடைய வகையில் ஒரு ஒளியியல் நிறமாலைவரைவியை உருவாக்கியுள்ளனர்.
  • ARIES - தேவஸ்தால் மயங்கு பொருள் நிறமாலை வரைவி & கேமரா (ADFOSC) என பெயரிடப்பட்ட இந்த ஒளியியல் நிறமாலை வரைவியானது நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி மையத்தால் (ARIES - Aryabhatta Research Institute of Observational Sciences) உள்நாட்டிலேயே வடிவமைத்து, உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஸ்பெக்ட்ரோஸ்கோப் என்பது நாட்டில் இது போன்று தற்போதுள்ள வானியல் நிறமாலை வரைவிகளில் மிகப்பெரிய நிறமாலை வரைவி ஆகும்.
  • இது 3.6மீ தேவஸ்தால் ஒளியியல் தொலைநோக்கியின் (DOT) மீது வெற்றிகரமாக நிறுவப் பட்டது.
  • DOT என்பது நாட்டிலும் ஆசியாவிலும் உள்ள மிகப்பெரிய ஒரு தொலைநோக்கி ஆகும்.
  • இது தொலைதூர குவாசர்கள் மற்றும் விண்மீன் திரள்கள் போன்ற பகுதிகளிலிருந்து மங்கலான ஒளியின் மூலங்களைக் கண்டுபிடிக்க உதவும்.
  • அந்த மூலங்கள் மிக இளம் வயது பிரபஞ்சம், கருந்துளைகளைச் சுற்றியுள்ள பெரு வெடிப்புப் பகுதிகள், விண்மீன் திரள்கள் மற்றும் அண்ட வெடிப்புகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்