TNPSC Thervupettagam

ஆர்யபட்டா செயற்கைக்கோள் ஏவப்பட்டதன் 50 ஆம் ஆண்டு நிறைவு

April 24 , 2025 17 hrs 0 min 30 0
  • 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதியன்று, இந்தியாவானது தனது முதல் செயற்கைக் கோளான ஆர்யபட்டாவை விண்ணில் ஏவியது.
  • இஸ்ரோ நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த ஆர்யபட்டா செயற்கைக் கோளானது, சோவியத் ஒன்றியத்தில் இருந்து சோவியத் காஸ்மோஸ்-3M ஏவுகலத்தின் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
  • ஊடு கதிர்வீச்சு சார் வானியல், சூரிய இயற்பியல் மற்றும் வளிமண்டலவியல் ஆகியவற்றில் சோதனைகளை மேற்கொள்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • ஆனால் தனது சுற்றுப்பாதையில் நுழைந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஆர்யபட்டா செயற்கைக் கோளில் மின்னிணைப்பு செயலிழந்தது.
  • அதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அதன் அறிவியல் சார் ஆய்வு நோக்கங்கள் நிறைவு செய்யப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்