TNPSC Thervupettagam
November 5 , 2022 625 days 351 0
  • புகழ்பெற்ற மகளிர் உரிமை ஆர்வலர், SEWA (சுய தொழில் மகளிர் சங்கம்) நிறுவனர் எலா பட் அகமதாபாத்தில் காலமானார்.
  • SEWA என்பது 1972 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய மகளிர் கூட்டுறவு மற்றும் தேசியத் தொழிற்சங்கங்களில் ஒன்றாகும்.
  • SEWA அமைப்பானது 1974 ஆம் ஆண்டில் மகளிருக்கு சிறு கடன்களை வழங்குவதற்காக ஒரு வங்கியை நிறுவி, தனக்கென ஒரு புதியப் பிராந்தியத்தினை நிறுவியது.
  • 18 இந்திய மாநிலங்களில் அமைந்துள்ள அதன் அலகுகளைத் தவிர, தெற்காசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுய தொழில் செய்யும் பெண்களும் SEWA அலகுகளை அமைத்துள்ளனர்.
  • SEWA அமைப்பானது, இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் முதல் ஆசிரிய உறுப்பினரான கமலா சவுத்ரியின் பெயரில் கமலா என்ற கஃபே ஒன்றையும் நடத்தச் செய்கிறது.
  • எலா மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிற்குப் பரிந்துரைக்கப் பட்டதோடு, திட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும், உலக வங்கி போன்ற அமைப்புகளின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
  • 2007 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக நெல்சன் மண்டேலா அவர்களால் நிறுவப்பட்ட உலகத் தலைவர்களின் குழுவான எல்டர்ஸ் குழுவில் இவர் இணைந்தார்.
  • இவர் அகமதாபாத்தில் மகாத்மா காந்தி அவர்களால் நிறுவப்பட்ட பல்கலைக் கழகமான குஜராத் வித்யாபீடத்தின் வேந்தராகவும் பணியாற்றினார்.
  • இவர் பத்ம பூஷன், ராமன் மகசேசே விருது மற்றும் அமைதிக்கான இந்திரா காந்தி சர்வதேப்ச பரிசு மற்றும் பல விருதுகளையும் பெற்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்