தற்போது நடந்துக் கொண்டிருக்கும் ஆறாவது பெரும் அழிவானது நாகரிகத்தின் நிலைத்தன்மைக்கு மிகவும் கடுமையான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருக்கலாம்.
இந்த ஆராய்ச்சியானது அமெரிக்காவின் தேசிய அறிவியல் கல்விக் குழுமத்தின் செயல்முறைகள் இதழில் (Journal Proceedings of the National Academy of Sciences) வெளியிடப் பட்டுள்ளது.
பெரும் அழிவு என்பது அழிவின் மீதான அளவின் கணிசமான அதிகரிப்பு அல்லது புவியியல் ரீதியாக குறுகிய காலத்தில் பூமி அதன் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட உயிரினங்களை இழப்பதைக் குறிக்கிறது.
இதுவரை, பூமியின் முழு வரலாற்றிலும் ஐந்து பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 450 மில்லியன் ஆண்டுகளில் நிகழ்ந்த ஐந்து பெரும் அழிவுகள் முன்பு இருந்த தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றின் 70-95 சதவீத உயிரினங்களை அழிக்க வழிவகுத்தன.
தற்போது நடந்துக் கொண்டிருக்கும் ஆறாவது ஒன்று, மானுடச் செயல்களால் ஏற்படும் அழிவு என குறிப்பிடப் படுகிறது.
உயிரினங்களின் இழப்பு நிரந்தரமானதாக இருக்கும் என்பதால் ஆராய்ச்சியாளர்கள் இதை “மிகவும் கடுமையான ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினை” என்று குறிப்பிட்டு உள்ளனர்.
மனித குலத்தின் மூதாதையர்கள் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை உருவாக்கியதிலிருந்து உயிரினங்களின் இழப்பு ஏற்பட்டு வருகின்றது.
இதில் வெப்பமண்டலப் பகுதிகள் அதிகமாகக் குறைந்து வரும் உயிரினங்களைக் கண்டுள்ளன.