ஆறாவது வெகுஜன அழிவின் அச்சுறுத்தலைப் பற்றி எச்சரிக்கும் "வாழ்க்கைக் கட்டமைப்பின்" அனைத்துக் கிளைகளையும் மனித இனம் இழந்து வருகிறது.
இந்த ஆய்வு ஆனது பெரும்பாலும் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தினால் (IUCN) அழிந்து விட்டதாக பட்டியலிடப்பட்ட உயிரினங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப் பட்டது என்பதோடு மேலும் இது முதுகெலும்பு கொண்ட உயிரினங்கள் (மீன்கள் தவிர்த்து) குறித்தும் கவனம் செலுத்துகிறது.
சுமார் 34,600 இனங்களை உள்ளடக்கிய சுமார் 5,400 இனங்களில் 73 இனங்கள் கடந்த 500 ஆண்டுகளில் அழிந்து விட்டன.
முந்தைய மில்லியன் ஆண்டுகளில் பதிவான அழிவு விகிதத்தின் அடிப்படையில் நமது மனித இனமானது இரண்டு வகைகளை இழக்க நேரிடும் என்றாலும் ஏற்கனவே நமது மனித இனம் 73 வகைகளை இழந்துவிட்டன.
வெகுஜன அழிவு என்பது குறுகிய காலத்தில் 75 சதவீத உயிரினங்களின் இழப்பு என வரையறுக்கப் படுகிறது.