ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, இராமேஸ்வரம் தீவு மற்றும் இலங்கைக்கு இடையில் உள்ள மணல் திட்டுகளில் ஆறு வகையான கடற்பறவைக் கூட்டத்தின் இனப்பெருக்கப் பகுதியினைக் கண்டறிந்துள்ளது.
இலங்கையின் கடல்சார் எல்லைக்கு அருகிலுள்ள அரிச்சல் முனையிலிருந்து தென் கிழக்கில் 8 கி.மீ தொலைவில் உள்ள இந்த மணல் திட்டுகளில் அவை பதிவு செய்யப் பட்டன.
மிக அருகில் அமைந்துள்ள புகைப் பழுப்பு நிற ஆலாக்கள் இனத்தின் இனப்பெருக்கப் பகுதிகள் செர்பானியானி பவளப் பாறைகள் மற்றும் லட்சத் தீவு, இலங்கை மற்றும் மாலத்தீவின் பிட்டி தீவில் அமைந்துள்ளன.
I முதல் VII வரையிலான இந்த மணல் திட்டுகள் ஆனது, தடை செய்யப்பட்ட அணுகல் காரணமாக மனிதர்களால் பெரும்பாலும் எந்தவித இடையூறும் இன்றி உள்ளன.