TNPSC Thervupettagam

ஆறு புதிய புறக்கோள்கள்

July 25 , 2024 38 days 157 0
  • ஆறு புதிய உலகங்களைக் கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
  • வியாழன் கோளினை விட மீப்பெரு அளவிலான HD 36384 b என்பது, நமது சூரியனை விட சுமார் 40 மடங்கு பெரிய M என்ற இராட்சத நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.
  • TOI-198 b ஆனது அதன் நட்சத்திரத்தின் வாழக் கூடிய மண்டலத்தின் உள் விளிம்பில் காணப் படும் ஒரு சாத்தியமான வாழக் கூடிய வாய்ப்புள்ள பாறைக் கோள் ஆகும்.
  • TOI-2095 b மற்றும் TOI-2095 c ஆகியவை ஒத்த M குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வரும் வெப்பமான மீப்புவி கோள் ஆகும்.
  • TOI-4860 b என்பது M குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி 1.52 நாட்களுக்கு ஒருமுறை ஒரு சுற்றுப் பாதையை நிறைவு செய்கின்ற ஓர் அரிய "சூடான வியாழன் அளவுள்ள கோள்" ஆகும்.
  • தற்போது, ​​நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் காணப்படுவதாக உறுதிப்படுத்தப் பட்ட மொத்த கிரகங்களின் எண்ணிக்கை 5,502 ஆக அதிகரித்துள்ளது.
  • தோராயமாக 31 ஆண்டுகளுக்கு முன்பு, 1992 ஆம் ஆண்டில், இரட்டைக் கோள்களான போல்டர்ஜிஸ்ட் மற்றும் ஃபோபெட்டர் ஆகியவற்றினை அறிவியலாளர்கள் கண்டறிந்த போது வெளிக்கோள்கள் கண்டறியப்பட்டுள்ளத்தை உறுதி செய்தனர்.
  • அவை PSR B1257+12 என்ற துடிப்பு அண்டங்களைச் சுற்றி வருகின்றன.
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களின் எண்ணிக்கையானது 5,000 அளவினைத் தாண்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்