ஆறு புதிய உலகங்களைக் கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
வியாழன் கோளினை விட மீப்பெரு அளவிலான HD 36384 b என்பது, நமது சூரியனை விட சுமார் 40 மடங்கு பெரிய M என்ற இராட்சத நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.
TOI-198 b ஆனது அதன் நட்சத்திரத்தின் வாழக் கூடிய மண்டலத்தின் உள் விளிம்பில் காணப் படும் ஒரு சாத்தியமான வாழக் கூடிய வாய்ப்புள்ள பாறைக் கோள் ஆகும்.
TOI-2095 b மற்றும் TOI-2095 c ஆகியவை ஒத்த M குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வரும் வெப்பமான மீப்புவி கோள் ஆகும்.
TOI-4860 b என்பது M குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி 1.52 நாட்களுக்கு ஒருமுறை ஒரு சுற்றுப் பாதையை நிறைவு செய்கின்ற ஓர் அரிய "சூடான வியாழன் அளவுள்ள கோள்" ஆகும்.
தற்போது, நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் காணப்படுவதாக உறுதிப்படுத்தப் பட்ட மொத்த கிரகங்களின் எண்ணிக்கை 5,502 ஆக அதிகரித்துள்ளது.
தோராயமாக 31 ஆண்டுகளுக்கு முன்பு, 1992 ஆம் ஆண்டில், இரட்டைக் கோள்களான போல்டர்ஜிஸ்ட் மற்றும் ஃபோபெட்டர் ஆகியவற்றினை அறிவியலாளர்கள் கண்டறிந்த போது வெளிக்கோள்கள் கண்டறியப்பட்டுள்ளத்தை உறுதி செய்தனர்.
அவை PSR B1257+12 என்ற துடிப்பு அண்டங்களைச் சுற்றி வருகின்றன.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களின் எண்ணிக்கையானது 5,000 அளவினைத் தாண்டியது.