ஆறு மத்திய அமைச்சரவைக் குழுக்கள் – மத்திய அரசு மறுசீரமைப்பு
September 12 , 2017 2677 days 1400 0
மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டபின் மத்திய அரசு ஆறு அமைச்சரவைக் குழுக்களை மறுசீரமைத்துள்ளது.
1961 ஆம் ஆண்டு இந்திய அரசிற்கான அலுவல் விதிமுறைகள் நடவடிக்கைகளின் கீழ் ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இவை அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. அரசின் வேலைப்பளுவைக் குறைப்பதற்காக இக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் இரயில்துறை மந்திரி பியூஸ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது 6 அமைச்சரவை குழுக்கள் உள்ளன.
நியமனங்களுக்கான அமைச்சரவைக்குழு (Appointments Committee of the Cabinet - ACC)
இது மத்திய செயலகம், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான அனைத்து தலைமைப் பதவிகளையும் நியமிப்பதற்கான அமைப்பாகும்.
பணியமர்த்தலுக்கானஅமைச்சரவைக்குழு (Cabinet Committee on Accommodation - CCA)
இது இந்திய அரசின் முக்கியமான தலைமைப் பதவிகளுக்கான பணியமர்த்தலை செய்யும் குழுவாகும்.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Economic Affairs - CCEA)
இது நாட்டின் பொருளாதாரம் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் முடிவு செய்யும்.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு(Cabinet Committee on Parliamentary Affairs - CCPA)
இது இந்திய பாராளுமன்றத்தில் அரசின் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யும்.
பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Security - CCS)
இது இந்தியாவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த குழுவாகும். பாதுகாப்புத் துறை செலவினங்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக் குறித்த முடிவுகளை இக்குழு எடுக்கிறது.
அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on political Affairs - CCPA)
இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த அமைச்சரவைக் குழு இது. இது நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கிறது.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவைத் தவிர மற்ற அனைத்து அமைச்சரவைக் குழுக்களும் பிரதம மந்திரியால் தலைமை தாங்கப்படுபவையாகும். பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் தலைவர் மத்திய உள்துறை அமைச்சர் ஆவர்.