16 ஆம் நூற்றாண்டின் போதான ஆற்காடு நவாப் முகமது அலி கான் வாலாஜாவின் இல்லம் ஆனது, விரைவில் ஆற்காடு தள அருங்காட்சியகத்திற்கான நிரந்தரத் தளமாக மாற உள்ளது.
1690 ஆம் ஆண்டில் ஔரங்கசீப் அவர்களால் ஜூல்பிஹர் கான் என்பவர் நவாப்பாக நியமிக்கப்பட்ட போது, ஆற்காடு கர்நாடகப் பகுதியின் தலைநகராக இருந்தது.
நவாப் அலி, பிரிட்டிஷ் இராணுவத்துடன் நெருக்கமான தொடர்பு மேற்கொள்வதற்காக சென்னைக்குச் செல்வதற்கு முன், இந்தக் கட்டிடமானது பல ஆண்டுகளாக அவரது அதிகாரப் பூர்வ இல்லமாக இருந்தது.
1768 ஆம் ஆண்டில் சேப்பாக்கம் அரண்மனையைக் கட்டிய பிறகு அவர் இந்தக் கட்டிடத்தினை விட்டு முற்றிலுமாக வெளியேறினார்.
அதிலுள்ள 1,200க்கும் மேற்பட்ட அரிய கலைப்பொருட்களில், கல் சிற்பங்கள், சுடுமண் சிலைகள், நாணயங்கள், இஸ்லாமியத் தொல்பொருட்கள், பீங்கான் பாத்திரங்கள், இரும்புக் கருவிகள், மர கலைப்பொருட்கள் மற்றும் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இருந்து கிடைத்த பல்வேறு தொல்பொருட்கள் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.