இங்கிலாந்து அரசினுடைய உதவியுடன் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமானது (Indian Institute of Technology -IIT) இந்தியாவின் முதல் எரிபொருள் ஒழுங்குமுறை மையத்தை (Centre for Energy Regulation-CER) துவங்கியுள்ளது.
ஆற்றல் ஒழுங்குமுறைக்கான இந்தியாவின் இத்தகு முதல் வகையிலான இம்மையத்தின் நோக்கமானது ஆற்றல் மற்றும் எரிபொருள் துறையில், கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் மீது சுதந்திரமாக ஆலோசனை வழங்குவதே ஆகும்.
இம்மையமானது இந்தியாவின் ஆற்றல் துறையில் ஒழுங்குமுறை ஆராய்ச்சியினை (regulatory research) மேம்படுத்துவதற்காக IIT கான்பூரின் தொழிற்துறை மற்றும் பொறியியல் துறையினால் (Department of Industrial and Management Engineering) தொடங்கப்பட்ட ஓர் துவக்கமாகும்.
இந்த எரிபொருள் ஒழுங்குமுறை மையம் மற்றும் அதனுடைய அடையாளம் காணப்பட்ட செயல்பாடுகளுக்கு இங்கிலாந்து அரசின் சர்வதேச மேம்பாட்டிற்கான துறை (Department for International Development-DfID) நிதியினை வழங்கும்.