TNPSC Thervupettagam

ஆற்றல் திறன்மிகு நகரங்கள்

April 2 , 2021 1242 days 906 0
  • இரண்டு பசுமை ஆற்றல் திறன்மிகு நகரங்களைக் கொண்ட முதல் இந்திய மாநிலமாக பீகார் மாற உள்ளது.
  • அந்த இரு நகரங்கள் ராஜ்கிர் மற்றும் புத்த கயா ஆகும்.
  • இவை 2023 ஆம் ஆண்டிலிருந்து ஆற்றல் திட்டம் மூலம் சூரிய ஆற்றலைப் பெறும்.
  • இந்த நகரங்களை இயக்குவதற்கான ஆற்றலானது இந்திய சூரிய ஆற்றல் கழகத்தினால் (Solar Energy Corporation of India - SECI) உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப் படும்.
  • இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக பீகார் மாநில அரசு, லக்கிசராய் மற்றும் பால்பூர் ஆகிய இடங்களில் 500 மெகாவாட் திறனுடைய சூரிய ஆற்றல் நிலையங்களை அமைக்க உள்ளது.

SECI

  • இது சூரிய ஆற்றல் துறைக்காகவே என்று பிரத்தியேகமாகச் செயல்படும் ஒரே மத்திய பொதுத் துறை நிறுவனம் (CPSU) ஆகும்.
  • இது புதிய மற்றும் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.
  • இக்கழகம் தேசிய சூரிய ஆற்றல் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் 2011 ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது.
  • இத்திட்டம் ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய ஆற்றல் திட்டம் எனவும் அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்