ஆற்றல் மாற்றத்திற்கான குறைந்த நிதி ஒதுக்கீட்டு அறிக்கை
June 9 , 2023 535 days 310 0
சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமானது (IRENA) ஆற்றல் மாற்றத்திற்கான குறைந்த நிதிஒதுக்கீடு எனும் அறிக்கையை வெளியிட்டது.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள், சூரிய ஒளி மின்னுற்பத்தி மற்றும் கடலோரக் காற்றாலை மின்சாரம் ஆகியவை முதிர்ச்சியடைந்த போட்டித் தன்மையுடன் உள்ளன.
கடற்பரப்பு காற்றாலை, ஹைட்ரஜன் மின்பகுப்பான், ஆற்றல் சேமிப்பு மற்றும் வெப்ப விசையியக்கக் குழாய்கள் ஆகியவற்றை மிக அதிவேகமாகவும் மிக அதிக அளவிலும் பயன்படுத்தப் பட வேண்டியுள்ளது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனின் முன்னேற்றத்தைப் பாராட்டி அதை "ஈடு இணையற்றது " என அது குறிப்பிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஈர்ப்பு குறியீட்டில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய நான்காவது சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்தளத்தை இந்தியா கொண்டுள்ளது.
இந்தியா தனது நிகரச் சுழிய உமிழ்வு இலக்கை 2070 ஆம் ஆண்டிற்குள் அடைய $ 10 டிரில்லியன் நிதியானது தேவைப்படும்.