TNPSC Thervupettagam

ஆற்றல் முன்னேற்ற அறிக்கை 2022

June 15 , 2022 895 days 497 0
  • 2022 ஆம் ஆண்டின் '7வது நிலையான மேம்பாட்டு இலக்கினைக் கண்காணித்தல்: ஆற்றல் முன்னேற்ற அறிக்கையானது' சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் மலிவு விலையில் நவீன ஆற்றல் விநியோகத்தை உறுதி செய்யும் நிலையான மேம்பாட்டு இலக்கை (SDG 7) அடையச் செய்வதற்காக உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை இது கண்காணிக்கிறது.
  • இந்த ஆய்வானது 7வது நிலையான மேம்பாட்டு இலக்கின் பாதுகாவலர் முகமைகள் என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் மற்றும் பங்குதார அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டது.
  • உலகளவில் 733 மில்லியன் மக்கள் மின்சார வசதி இல்லாமல் உள்ளனர்.
  • 2.4 பில்லியன் மக்கள் இன்னும் தங்கள் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் எரிபொருளைப் பயன்படுத்தியே சமைக்கிறார்கள்.
  • 568 மில்லியன் மக்கள் மின்சார வசதி பெறாத நிலையில், உலகில் மிகக் குறைந்த மின்சார வசதி பெற்றவர்களாக ஆப்பிரிக்கர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்