திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பெண் பக்தர்கள் ‘பண்டார அடுப்பு’களுடன் கூடியுள்ளனர்.
ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா ஆனது, உலகிலேயே பெண்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் விழாக்களில் ஒன்றாகும்.
இது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பத்து நாட்கள் அளவிலான திருவிழாவின் ஒன்பதாம் நாளில் நடைபெறுகிறது.
பெண்கள் மட்டுமே இந்தச் சடங்குகளை மேற்கொள்வதால் ஆற்றுக்கால் கோயில் "பெண்களின் சபரிமலை" என்று அழைக்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டில், ஒரே நாளில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதையடுத்து, இந்த சடங்கு மிகப்பெரிய மதம் சார்ந்த பெண்கள் கூட்டமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.