ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP – United Nations Environment Programme) “கழிவுகளுக்கு திடமான அணுகுமுறை ; எப்படி 5 நகரங்கள் மாசுபாட்டை தோற்கடிக்கின்றன“ (solid approach of waste ; how 5 cities are beating pollution) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
திட கழிவு மேலாண்மையை வெற்றிகரமாக கையாளும், UNEP-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து உலக நகரங்களுள் இந்தியாவின் கேரளாவிலுள்ள ஆலப்புழா நகரமும் இடம் பெற்றுள்ளது.
பிற நான்கு உலக நகரங்கள்
ஒசாகா (ஜப்பான்)
ஜீப்ல் ஜானா (Ljubljana) – ஸ்லோவேனியா
பெனாங் (மலேசியா)
கஜிகா (கொலம்பியா)
காயல் மற்றும் கடல் கழிமுகங்கள் உடையதால் “கிழக்கின் வெனிஸ்“ என்றழைக்கப்படும் ஆலாப்புழா நகரமானது மையக்குவிப்பற்ற (அ) பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை முறையை (Decentralised Waste Management System) மேற்கொண்டு வருகின்றது.
நகரத்தின் வார்டுகள் அளவிலேயே உயிர்மட்கு கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு ஆங்காங்கே இருக்கும் சிறிய குப்பை உரமாக்கு நிலையங்களில் மட்கிடச் செய்து அதன் மூலம் பெறப்படும் உயிர் – எரிவாயு ஆனது குடியிருப்பு வாசிகளுக்கு அளிக்கப்படுகின்றது.
2016-ல் ஆலப்புழா நகரமானது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் “தூய்மையான நகரம்“ என்ற விருதினைப் பெற்றுள்ளது.