ஆலிவ் ரிட்லி ஆமைகளின் குஞ்சு பொரிப்பிற்கான தளங்கள்
March 17 , 2024 252 days 398 0
தமிழ்நாடு வனத்துறையானது ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளுக்காக ‘பருவநிலை நெகிழ் திறன் கொண்ட’ குஞ்சு பொரிப்புத் தளங்களை அமைத்துள்ளது.
சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் தலா இரண்டு, விழுப்புரம், கடலூர், நாகப் பட்டினம், திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றில் தலா ஒன்று என 10 குஞ்சு பொரிப்புத் தளங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஆமைக் குஞ்சுப் பொரிப்பு இடங்களில் நிலவும் அதிக வெப்பநிலையானது, பெண் ஆமைக் குஞ்சுகளை அதிக விகிதத்தில் உற்பத்தி செய்யவும், குளிர்ச்சியான வெப்ப நிலை ஆண் ஆமைக் குஞ்சுகளை அதிக விகிதத்தில் உற்பத்தி செய்ய வழிவகுக்கும் என்று அறியப்படுகிறது.
கடல் ஆமைகள் 30°C வெப்பநிலை என்ற அளவு வெப்பநிலையுடன் வெப்பநிலை சார்ந்த பாலின நிர்ணயத்தைக் கொண்டுள்ளன.