ஆலிவ் ரிட்லி ஆமைகளின் திரளான உயிரிழப்பு
February 1 , 2023
668 days
380
- பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள நூற்றுக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமைகள் (லெபிடோசெலிஸ் ஒலிவேசியா) இறந்து கடற்கரையோரத்தில் கரை ஒதுங்கியுள்ளன.
- அவை முட்டையிடும் இடங்களான சக்கிநெட்டிப்பள்ளி, மாலிகிபுரம், மாமிடிகுடுரு மற்றும் அல்லாவரம் ஆகிய இடங்களில் ஆமைகள் பெருமளவில் இறந்து கரை ஒதுங்குகின்றன.
- ஆலிவ் ரிட்லி ஆமைகள் பசிபிக் ரிட்லி ஆமைகள் என்றும் அழைக்கப் படுகின்றன.
- IUCN என்ற அமைப்பானது இந்த ஆமைகளை "பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள இனங்கள்" என்று வகைப்படுத்துகிறது.
- அவை இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் காணப் படுகின்றன.
- இந்தியாவில் காணப்படும் அவற்றின் முட்டையிடும் இடங்கள் ஓடிசாவில் உள்ள காஹிர்மாதா கடற்கரை ஆகும்.
- உலகில் உள்ள மிகப்பெரிய ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் இடங்களில் இந்தக் கடற்கரையும் ஒன்றாகும்.
Post Views:
380