தோராயமாக 1.25 இலட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் ஒடிசா கடற்கரையோரத்தில் உள்ள கலாம் தீவிலிருந்து கடலுக்குள் சென்றன.
பன்னாட்டு இயற்கை மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு மன்றத்தின்படி (International Union for Conservation of Nature and Natural Resources - IUCN) ஆலிவ் ரிட்லியானது “பாதிக்கப்படக்கூடிய இனமாக” வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது CITES (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) என்ற அமைப்பின் பட்டியல் – 1ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆபத்தான இனங்களில் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தம் என்பது அருகிவரும் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதற்கான ஒரு பன்முனை ஒப்பந்தமாகும்.
மேலும் இது வாஷிங்டன் ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.
1975 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று CITES நடைமுறைக்கு வந்தது.
இந்தியாவில் ஆலிவ் ரிட்லி ஆமையின் மிக முக்கியமான அடைகாக்கும் தளங்கள் பின்வருமாறு: