கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆனது “விங்” என்று பெயரிடப்பட்ட ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் சேவை வழங்குதலை மேம்படுத்தியுள்ளது. இது ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா நகரத்தில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆளில்லா குட்டி விமானங்கள் உணவு, குளிர் பானங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றை நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று வழங்க விருக்கின்றன.