TNPSC Thervupettagam

ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கான காப்புரிமை

January 7 , 2024 323 days 235 0
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பான, கம்பிவழி இணைக்கப்பட்ட வான் வழி வாகனத்திற்கு இந்தியக் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
  • கம்பிவழியில் இணைக்கப்பட்ட வான்வழி வாகனம் என்பது தரையில் உள்ள ஓர் அமைப்புடன் இணைக்கப்பட்ட ஆளில்லா பறக்கும் வாகனமாகும்.
  • கெவ்லர் முலாம் பூசப்பட்ட கண்ணாடி இழை கம்பிவடம் மூலம் தரையில் உள்ள அமைப்பில் இருந்து இதற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
  • இந்தப் புதுமையான கண்டுபிடிப்பானது, அதிகபட்ச உறுதித்தன்மையை வழங்கச் செய்வதோடு, மின்கலம் சார்ந்த வரம்புகள் போன்ற எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஆளில்லா வான்வழி வாகனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது.
  • இந்த வாகனம் ஆனது ஆளில்லா வான்வழி வாகனத்தினைக் கம்பிவட இணைப்பின்றி இயக்கும் வகையில் ஒரு கலப்பின அமைப்பாகவும் செயல்பட கூடியது.
  • இந்தக் காப்புரிமை ஆனது 2018 ஆம் ஆண்டு நவம்பர் 08 முதல் 20 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்