இந்தியாவின் முதல் ‘ஆளில்லா விமானக் காவல் பிரிவு’ சென்னையில் தொடங்கப் பட்டது.
அடையாறு பெசன்ட் அவென்யூவில் புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்பு ட்ரோன் காவல் பிரிவைக் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் காவல்துறைத் தலைவர் சி. சைலேந்திர பாபு திறந்து வைத்தார்.
இந்தப் பிரிவு இரண்டு மாடி கட்டிடத்தில் நிறுவப்பட்டதுடன் 20க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற காவலர்களுடன் செயல்படுகிறது.
தற்போது மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகளைச் சுற்றி ஆளில்லா விமானங்கள் இயக்கப் படுகின்றன.
இந்த ட்ரோன் காவல் பிரிவில், மூன்று பிரிவுகளின் கீழ் மொத்தம் ஒன்பது ட்ரோன்கள் விரைவுப் பதில் கண்காணிப்பு ட்ரோன்கள்; கன தூக்கு மல்டிரோட்டர் ட்ரோன் மற்றும் நீண்ட வரிசை ஆய்வு விங் விமானம் ஆகியவை கிடைப்பதோடு அது உள்ளமைக்கப் பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களையும் கொண்டுள்ளது.
இந்த ட்ரோன்களை, 5 கி.மீ., தொலைவு வரை கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்க முடியும்.