TNPSC Thervupettagam

ஆளில்லா விமானங்களின் மூலம் மருந்துகள் விநியோகம் – தெலுங்கானா

October 7 , 2019 1751 days 495 0
  • அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை தொலைதூரப் பகுதிகளில்  விநியோகிப்பதற்கு என்று  ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை தெலுங்கானா அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இரத்தம் மற்றும் மருத்துவ மாதிரிகள் போன்ற பொருட்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் இனிமேல் வழங்கப்பட இருக்கின்றன.
  • குறிக்கோள்: மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பிரிவினர்களுக்கான சுகாதார அணுகலை அதிகரிப்பது.
  • இந்தக் கட்டமைப்பானது பின்வரும் அமைப்புகளினால் இணைந்து வடிவமைக்கப் பட்டுள்ளது
    • உலகப் பொருளாதார மன்றம் (WEF – World Economic Forum)
    • அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம்
  • இது WEFன் “வானிலிருந்து மருத்துவம்” என்ற முயற்சியின் ஒரு பகுதியாகும்.
  • தெலுங்கானா அரசு தனது ஆளில்லா விமானக் கொள்கைக்காக உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் பொது இயக்குநரகத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்