TNPSC Thervupettagam

ஆளில்லா விமானங்கள் (திருத்தம்) விதிகள், 2023

October 12 , 2023 283 days 273 0
  • இந்தியப் பொது விமானப் போக்குவரத்து அமைச்சகமானது 2023 ஆம் ஆண்டு ஆளில்லா விமானங்கள் (திருத்தம்) விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை உலகளாவிய ஆளில்லா விமான உற்பத்தி மையமாக நிறுவும் நோக்குடன் நாடு முழுவதும் ஆளில்லா விமானச் செயல்பாடுகளை தாராளமயமாக்குதல், ஊக்குவித்தல் மற்றும் நெறிப்படுத்துதல் ஆகியவற்றை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தொலைதூரத்தில் இருந்து இயக்குவதற்கான சான்றிதழைப் பெறுவதற்கு முன்பு இருந்த கடுமையான நிபந்தனைகளைத் தளர்த்துவது இந்தத் திருத்தங்களின் மூலம் கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும்.
  • முன்னதாக, இந்த முக்கியமான ஆவணத்திற்கு விண்ணப்பிக்க கடவுச் சீட்டு கட்டாயமாக இருந்தது.
  • இது ஏராளமான ஆளில்லா விமான இயக்குனர்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் வேளாண் துறையில் உள்ளவர்களுக்கு தடையாக இருந்தது.
  • ஒருவர் தற்போது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாளச் சான்று மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற முகவரிச் சான்றிதழைப் பயன்படுத்தி இனி இந்தச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க செய்யலாம்.
  • டிஜிட்டல் ஸ்கை என்ற இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்ட செல்லுபடியாகும் தொலை தூரத்தில் இருந்து இயக்குவதற்கான இயக்குநர் சான்றிதழை வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே இந்தியாவில் ஆளில்லா விமானங்களை இயக்க அங்கீகரிக்கப் படுவார்கள்.
  • இருப்பினும், வணிக ரீதி சாராத ஆளில்லா விமானப் பயன்பாட்டிற்கு, 2 கிலோ வரை எடையுள்ள ஆளில்லா விமானங்களுக்கு இந்தச் சான்றிதழ் தேவையில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்