விமானப் போக்குவரத்து பொது இயக்குனரகமானது (The Directorate General of Civil Aviation - DGCA) தொலைதூர விமான ஓட்டிகளுக்கான விமான அமைப்புத் திட்டத்தின் கீழ் (Remotely Piloted Aircraft System - RPAS) வேலூர், சேலம், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களை ஆளில்லா விமானங்களுக்கான புதிய சோதனை இடங்களாக அறிவித்துள்ளது.
சிவில் தொலைதூர விமான ஓட்டிகளுக்கான விமான அமைப்பு 2018 செயல்பாட்டின் தேவைகளானது விமானப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக ஆளில்லா வான்வழி விமானங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது.
ஆளில்லா விமானங்கள் செயல்பாட்டிற்கு வரும் முன்னர் அனைத்து ஆளில்லா விமானங்களும் “டிஜிட்டல் ஸ்கை” என்ற தளத்தில் DGCA – உடன் பதிவு செய்வது கட்டாயமாகும்.
RPAS ஆனது ஆளில்லா விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள மண்டலங்களாக விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகள், சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகள், தில்லியில் உள்ள விஜய் சவுக், மாநிலத் தலைநகரங்களில் அமைந்துள்ள தலைமைச் செயலக வளாகம், உத்திசார் முக்கியமான / இராணுவத் தளவாடங்கள் அமைந்துள்ள இடங்கள் ஆகியவற்றை அறிவித்துள்ளது.