TNPSC Thervupettagam

ஆளில்லாக் குட்டி விமான எதிர்ப்பு அமைப்பு

August 20 , 2020 1469 days 592 0
  • இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை அமைப்பின் ஆளில்லாக் குட்டி விமான எதிர்ப்பு அமைப்பானது ஆகஸ்ட் – 15 அன்று பிரதமரின் பாதுகாப்பிற்காகப் பணியில் ஈடுபடுத்தப் பட்டது.
  • இந்த ஆளில்லாக் குட்டி விமான எதிர்ப்பு அமைப்பானது 3 கிலோ மீட்டர் வரை ஆளில்லா நுண் விமானங்களைக் கண்டறியும் திறன் கொண்டதாகும்.
  • இது 1லிருந்து 1.25 கிலோ மீட்டர் வரை உள்ள இலக்கை வீழ்த்துவதற்கு லேசரைப் பயன்படுத்துகின்றது.
  • இது ஆளில்லா விமான அச்சுறுத்தல்களைக் கண்டறியும் திறன் கொண்டது.
  • ஆளில்லாக் குட்டி விமானங்கள் வெடி விபத்துகளை ஏற்படுத்துவதற்காக தீவிரவாதிகளால் தொலைதூரத்திலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு வகை குட்டி விமானங்களாகும்.
  • இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை அமைப்பு மேம்படுத்திய ஆளில்லாக் குட்டி விமான எதிர்ப்பு அமைப்பானது முதன்முறையாக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்ஸ்னரோ இந்தியா வந்த போது அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகப் பயன்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்