TNPSC Thervupettagam

ஆளுநரின் இரண்டாம் நிலை கருத்து

April 12 , 2025 7 days 156 0
  • ஆளுநரால் முன்னதாக நிராகரிக்கப்பட்ட முன்மொழியப்பட்டுள்ள ஒரு சட்டம் ஆனது, அம்மாநிலச் சட்டமன்றத்தினால் இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்படும் போது, ​​குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஒரு மசோதாவை ஒதுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • அரசியலமைப்பின் 200வது சரத்தின் கீழ், முதல் முறையாக ஒப்புதலுக்காக அனுப்பப் பட்ட 10 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் ஏதும் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தார்.
  • இருப்பினும், அந்த மசோதாக்கள் மாநிலச் சட்டமன்றத்தினால் மீண்டும் நிறைவேற்றப் பட்டு இரண்டாவது முறையாக மீண்டும் சமர்ப்பிக்கப்படும் போது ஆளுநர் அவற்றைக் குடியரசுத் தலைவரிடம் பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்தார்.
  • ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு ஒதுக்க விரும்பினால் அவர் அதனை முதல் கட்டத்திலேயே செய்திருக்க வேண்டும்.
  • ஒரு மசோதாவானது, "200வது சரத்தின் முதல் விதியின்படி மறுபரிசீலனைக்குப் பிறகு மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டால், ஆளுநர் உடனடியாக அல்லது மிகவும் அதிகபட்சம் ஒரு மாத காலக் கட்ட வரம்பிற்கு உட்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்