சமீபத்தில் தமிழக நிதியமைச்சர் ஆளுமையில் புத்தாக்கத்திற்கான ஒரு மையத்தினை நிறுவ உள்ளதாக அறிவித்தார்.
இது தமிழ்நாடு புத்தாக்க முன்னெடுப்புகளின் (TANII) கீழ் மாநில திட்டக் குழுவினால் உருவாக்கப் படும்.
இது ஆளுமையில் புத்தாக்கத்திற்கான பல்வேறு மேம்பட்ட அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்.
புத்தாக்கங்களைச் செயல்படுத்துவதற்காக நவீனத் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்துச் செயல்படுவதற்கு தமிழக மாநில அரசின் துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு இது உதவுகிறது.
இது எந்தத் தடையும் இல்லாமல் பொதுச் சேவைகளை வழங்குகிறது.
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையானது, அதன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக கூடுதல் தகவல் தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டு நவீன மயமாக்கப் படும்.
அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கணினிகள், அருகலை (வை-பை) மற்றும் இதர வசதிகளை வழங்குவதன் மூலம் இது மேலும் பலப்படுத்தப்படும்.