TNPSC Thervupettagam

ஆளுமையில் புத்தாக்கத்திற்கான மையம்

April 24 , 2023 454 days 235 0
  • சமீபத்தில் தமிழக நிதியமைச்சர் ஆளுமையில் புத்தாக்கத்திற்கான ஒரு மையத்தினை நிறுவ உள்ளதாக அறிவித்தார்.
  • இது தமிழ்நாடு புத்தாக்க முன்னெடுப்புகளின் (TANII) கீழ் மாநில திட்டக் குழுவினால் உருவாக்கப் படும்.
  • இது ஆளுமையில் புத்தாக்கத்திற்கான பல்வேறு மேம்பட்ட அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்.
  • புத்தாக்கங்களைச் செயல்படுத்துவதற்காக நவீனத் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்துச் செயல்படுவதற்கு தமிழக மாநில அரசின் துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு இது உதவுகிறது.
  • இது எந்தத் தடையும் இல்லாமல் பொதுச் சேவைகளை வழங்குகிறது.
  • பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையானது, அதன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக கூடுதல் தகவல் தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டு நவீன மயமாக்கப் படும்.
  • அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கணினிகள், அருகலை (வை-பை) மற்றும் இதர வசதிகளை வழங்குவதன் மூலம் இது மேலும் பலப்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்