ஆள்கடத்தலுக்கு எதிரான உலக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆள்கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மற்றும் அவர்களை ஊக்கப்படுத்த இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்காக மருந்துகள் மற்றும் குற்றங்கள் மீதான ஐக்கிய நாடுகள் அலுவலகம் (United Nations Office on Drugs and Crime - UNODC) தேர்ந்தெடுத்துள்ள கருத்துருவானது “குழந்தைகள் மற்றும் சிறு வயதினரின் கடத்தலுக்கு பதில் அளித்தல்" ஆகும்.
இத்தினம் கடத்தப்பட்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இத்தினத்தை அனுசரிப்பதன் மூலம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. மேலும் கடத்தப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் நீதி அளிப்பது ஆகியவற்றுக்கு தக்க நடவடிக்கைகளை எடுக்க இத்தினம் ஊக்கப்படுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2013ஆம் ஆண்டு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் ஆள்கடத்தலுக்கு எதிரான உலக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.