மத்திய இந்தியப்பெருங்கடலின் கடற்படுகையில் உள்ள பல்உலோகத் திரளைகளை (Polymetallic Nodules) ஆகழ்வாராய்ச்சி செய்து எடுப்பதற்கான இந்தியாவின் தனியுரிமையினை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கடற்படுகை ஆணையம் (International Sea bed Authority) தான் சர்வதேசக் கடற்பகுதியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்கான உரிமைகளை நிர்ணயிக்கிறது.
ஆகஸ்ட் 18 அன்று ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடைபெற்ற ஐ.எஸ்.ஏ (ISA) வின் 23 வது கூட்டத்தில் இந்தியாவிற்கான இந்த உரிமைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் (Ministry of Earth Sciences) மூலமாக பல்உலோகத் திரளைகளினை அகழ்வாராய்ச்சி செய்தலையும் அதைப் பயன்படுத்துதலையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.