TNPSC Thervupettagam

ஆழ்கடலில் அமைந்த முதல் ஆய்வு நிலையம்

February 18 , 2025 5 days 36 0
  • சீனாவானது கடல்சார் ஆய்வுகளை பரிமாற்றி அமைக்கக் கூடிய வகையில் ஆழ்கடல் ஆராய்ச்சிக் கட்டமைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • "ஆழ்கடல் வாயு வெளியேற்ற விரிசல்" என்ற சூழல் அமைப்பு ஆராய்ச்சி மையமானது, உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த தென் சீனக் கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 2000 மீட்டர்கள் (6560 அடி) கீழே நிறுவப்பட உள்ளது.
  • இந்த மையமானது மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப் பட்ட ஒரு அறிவியல் சார்ந்த கடலடி மையங்களில் ஒன்றாக இருக்கும்.
  • அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிகு அடுத்தபடியாக ஆழ்கடல் ஆய்வு நிலையத்தினை உருவாக்கி இயக்கும் உலகின் மூன்றாவது நாடாக சீனா மாற உள்ளது.
  • 2008 ஆம் ஆண்டில் செயல்பாட்டில் இருந்து விலகிய ஒரு அமெரிக்க ஆழ்கடல் ஆய்வு நிலையம் ஆன NR - 1 ஆனது அணுசக்தியில் இயங்கிய நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.
  • அணு உலையின் மூலம் இயக்கப்படும் சோவியத் ஒன்றியத்தின் ஆய்வு நீர் மூழ்கிக் கப்பலான AS-12 லோஷாரிக் 2000 மீட்டர் ஆழம் வரை எட்டியது.
  • இது 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெருந்தீ விபத்தினால் பாதிக்கப்பட்டதையடுத்து, ரஷ்யாவினால் கை விடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்