மத்திய புவி அமைச்சகமானது ஆழ்கடல் பணிக்கான (Deep Ocean Mission) செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைக் கோள்களை வடிவமைத்தல் மற்றும் ஏவுவதில் வெற்றியடைவதைப் போல ஆழ்கடல் ஆராய்ச்சியை மேற்கொள்ள இச்செயல்திட்டம் முன்மொழிகிறது.
இதன் கீழ் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.
அவையாவன
அலை ஆற்றலின் மூலம் உப்பகற்றுதல் நிலையம் மற்றும்
6000 மீ வரையிலான ஆழத்திற்கு சென்று ஆய்வு செய்வதற்கான நீர் மூழ்கி வாகனம்
பாலிமெட்டாலிக் திரளை (Polymetallic nodules) ஆய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகளின் சர்வதேச கடற்படுகை ஆணையம் (United nations International Seebed Authority) மத்திய இந்திய கடல் பகுதியில் 1,50,000 கிலோ மீட்டர் வரையிலான இடத்தை இந்தியாவிற்கு ஒதுக்கியுள்ளது.
கடற்படுகையில் உள்ள இந்த வகையான சிதறிக் கிடக்கும் பாறைகள் இரும்பு, நிக்கல், மாங்கனிசு மற்றும் கோபால்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்தப் பரந்த ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து 10 சதவிகித அளவுக்கு இந்தத் திரளை மீட்டெடுத்தால் இந்தியாவின் ஆற்றல் தேவையானது அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூர்த்தி செய்யப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மத்திய இந்திய கடல் பகுதியின் கடற்படுகையில் 380 மில்லியன் மெட்ரிக் டன்கள் பாலிமெட்டாலிக் திரள்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.