06.2019 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி சிறப்பு நிலை நகராட்சியானது 15வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்தப் புதிய மாநகராட்சியானது ஒரு மேயர், ஒரு ஆணையம், ஒரு நிலைக் குழு, செயல்பாட்டுக் குழு மற்றும் ஒரு ஆணையரைக் கொண்டிருக்கும்.
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920 என்ற சட்டத்தின் விதிமுறைகள் எந்தவொரு விதத்திலும் ஆவடிக்குப் பொருந்தாது.
ஆவடி மாநகராட்சியின் விதிமுறைகள் கோயம்புத்தூர் நகர மாநகராட்சிக் கழகச் சட்டம், 1981 ஆகியவற்றுடன் பொருந்தி அமைவதாக உள்ளது. எனவே ஆவடி மாநகராட்சிக்காக கோயம்புத்தூர் நகர மாநகராட்சிக் கழகச் சட்டம், 1981-ன் விதிமுறைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், தஞ்சாவூர், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், நாகர்கோவில் மற்றும் ஓசூர் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள இதர மாநகராட்சிகளாகும்.