மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் Central Board of Direct Taxes - CBDT) ஆவண அடையாள எண் முறையானது (Documentation Identification Number - DIN) தொடங்கப் பட்டுள்ளது.
இனிமேல் CBDT உடனான ஒவ்வொரு தகவல் தொடர்புகளும் அதாவது ஒரு அறிவிப்பு, கடிதம், உத்தரவு, அழைப்பாணை அல்லது வேறு ஏதேனும் கடிதப் பரிமாற்றமாக அவை இருந்தாலும், அவை ஒரு ஒரு DINஐக் கொண்டிருக்க வேண்டும்.
DIN (வாய்மொழி உத்தரவு) இல்லாத தகவல் தொடர்புகள் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றன.
வருமான வரித் துறை மற்றும் வரி செலுத்துவோர் ஆகியோருக்கு இடையே வெளிப்படையான மற்றும் பதிவு செய்யப்பட்ட தகவல்தொடர்பிற்கு DIN வழிவகை செய்கின்றது.
மேலும் எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் வரி செலுத்துவோருக்கு சிறந்த சேவைகளை இது வழங்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.