இந்த ஆண்டு விருது விழாவில் 23 பிரிவுகளில் சிறந்தச் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டன.
சீன் பேக்கரின் காதல் மற்றும் நகைச்சுவை நாடகமான அனோரா சிறந்த படம், சிறந்த நடிகை (மைக்கி மேடிசன்), சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்பட தொகுப்பு மற்றும் சிறந்த அசல் திரைக்கதை ஆகிய ஐந்து பிரிவுகளில் விருதுகளை வென்று இந்த விருது விழாவின் மிகப்பெரிய வெற்றியாளராக உருவெடுத்துள்ளது.
அட்ரியன் பிராடி, தி ப்ரூடலிஸ்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார் .
எமிலியா பெரெஸ் படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது ஜோ சல்டானாவுக்கு வழங்கப் பட்டது.
சிறந்த சர்வதேச திரைப்படம் - I'm Still Here – பிரேசில்.