இந்திய இரயில்வே உணவு வழங்குதல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC - Indian Railway Catering and Tourism Corporation) சமீபத்தில் பல்வேறு வினவல்களுக்கு விடையளித்து உதவுவதற்காக ஆஸ்க் திஷா (Ask Disha) என்ற பேசும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயற்கை நுண்ணறிவால் இயங்கும் பேசும் கருவியானது IRCTC மற்றும் கோரோவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இணைந்து உருவாக்கப்பட்டது.
இது ரயில்வே பயணிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகளைப் பற்றிய பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் அணுகலை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட முதல் இம்முறையிலான முயற்சியாகும்.