TNPSC Thervupettagam
July 15 , 2023 372 days 222 0
  • குவஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஊடுகதிர் படங்களிலிருந்து முழங்கால் கீல்வாதத்தை (மூட்டழற்சி) கண்டறியச் செய்வதற்கான ஆஸ்டியோ HRNet எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் அமைந்த ஒரு மாதிரிக் கட்டமைப்பை உருவாக்கி வருகின்றனர்.
  • இந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மாதிரியானது நோயின் தீவிரத் தன்மையைக் கண்டறியவும், தொலை உணர்வு மூலமாக ஒரு துல்லியமான முறையில் நோயினைக் கண்டறிய மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு உதவவும் பயன்படுகிறது.
  • முழங்கால் கீல்வாதம் நாட்டில் 28 சதவிகிதம் மக்களை வெகுவாகப் பாதித்துள்ள நிலையில் இன்றும், இந்த நிலைக்கு எந்தச் சிகிச்சையும் கண்டறியப்படல்லை.
  • நோயானது பெருமளவில் முற்றிய நிலையில் அந்த மூட்டினை மொத்தமாக மாற்றிப் பொருத்துதலே அதற்குச் சாத்தியமான ஒரு தீர்வாகும்.
  • எனவே வலி குறைப்பு மற்றும் இயக்க நடத்தைகளின் மாற்றங்களுக்கு ஆரம்பக் கட்ட நோயறிதல் அவசியமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்