TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியன் ஓபன்- ரோஜர் பெடரர்

January 30 , 2018 2490 days 869 0
  • டென்னிஸ் தரவரிசையில் இரண்டாம் நிலை வகிக்கும் சர்வதேச முன்னணி டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர் குரோசியா நாட்டினைச் சேர்ந்த ஆறாவது தரவரிசை வீரரான மரின் சிலிகோவை வீழ்த்தி தன்னுடைய 6வது ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.
  • இது இவரது 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
  • ரோஜர் பெடரர் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியை 6 முறையும், விம்பிள்டன் போட்டியை  8 முறையும், அமெரிக்கன் ஓபனை 5 முறையும் வென்றுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம்

  • டென்னிஸ் வரலாற்றில் கிராண்ட் ஸ்லாம் என்பது ஒரு வருடத்தில் நடைபெறும் 4 பெரிய டென்னிஸ் போட்டிகளின் தொடராகும்.
  • இந்த 4 பெரிய போட்டிகளும் மேஜர்ஸ் (Major) எனவும் அழைக்கப்படும். அவையாவன
    • ஆஸ்திரேலியன் ஓபன்
    • பிரெஞ்ச் ஓபன்
    • விம்பிள்டன்
    • அமெரிக்கன் ஓபன்
  • இந்த நான்கு பெரும் டென்னிஸ் தொடர்களை வெல்பவருக்கு கிராண்ட்ஸ்ஸாம் பட்டம் வழங்கப்படும்.
  • இந்த நான்கு போட்டிகளும் வெவ்வேறு வகையான டென்னிஸ் தரைகளில் ஆடப்பெறும்.
    • பிரெஞ்ச் ஓபன் போட்டியானது ஆனது களிமண் தரையில் ஆடப்பெறும்.
    • விம்பிள்டன் போட்டியானது புல்தரையில் ஆடப்பெறும்.
    • அமெரிக்கன் ஓபன் மற்றும்  ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிகளானது கடின டென்னிஸ் தரைகளில்   ஆடப்பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்