ஆஸ்திரேலியா - உரிமைகள் பறிக்கப்பட்ட தலைமுறையினருக்கான தேசிய மன்னிப்பு தினத்தின் ஆண்டு விழா
March 21 , 2023 617 days 272 0
1910 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மூன்று வெவ்வேறு பழங்குடியினக் குழந்தைகளில் ஒரு குழந்தையினை வெந்நிறச் சமூகத்தினருடன் சேர்க்கும் ஒரு முயற்சியில் அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டனர்.
1995 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணையமானது ஒரு நாடு தழுவிய விசாரணையைத் தொடங்கி, 1000க்கும் மேற்பட்ட உரிமைகள் திருடப்பட்டத் தலைமுறை குழந்தைகள் குறித்தத் தகவல்களைச் சேகரித்தது.
1997 ஆம் ஆண்டில் அவர்களை மீண்டும் தங்களது குடும்பங்களிடம் அழைத்து வருதல் என்ற பிரச்சாரமானது தொடங்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூட் தனது நாட்டுப் பழங்குடி மக்களிடம் முறையாக மன்னிப்பு கேட்டார்.
2023 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய நாட்டின் அரசாங்கமானது உரிமைகள் திருடப்பட்ட தலைமுறையினருக்கான தேசிய மன்னிப்புத் தினத்தின் 15வது ஆண்டு நிறைவினை அனுசரிக்கிறது.