சமீபத்திய ஆய்வுகள் ஆனது, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பண்டைய ஆஸ்திரோ ஆசிய மக்களுடன் உள்ள தொடர்புகளை வெளிப்படுத்தியுள்ளன.
சுமார் 11,700 ஆண்டுகளுக்கு முன்பு, நிக்கோபரீஸ் மொழியியல் மூதாதையர்கள் ஹோலோசீன் காலகட்டத்தில் நிக்கோபர் தீவுக்கூட்டத்தில் குடியேறியதாக முந்தைய கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், நிக்கோபார் தீவுவாசிகள் ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பு தான் அங்கு குடியேறியதாக இந்தப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.