TNPSC Thervupettagam

ஆஸ்ரோசாட்டின் 5 ஆண்டுகள் (ASTROSAT)

October 2 , 2020 1519 days 1024 0
  • இஸ்ரோவினால் செலுத்தப்பட்ட முதலாவது பல அலைநீள செயற்கைக் கோள் ஆஸ்ட்ரோசாட் ஆகும்.
  • இது 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று ஏவப்பட்டது.
  • இது வான் பொருட்களை வெற்றிகரமாகப் படம் பிடிப்பதில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
  • இது நட்சத்திரங்கள், நட்சத்திரத் தொகுப்புகள்மேகலினிக் மேகங்கள்எனப்படும் பால்வழி அண்டத்தின் பெரிய மற்றும் சிறிய விண்மீன் திரள்களை ஆய்வு செய்து உள்ளது.
  • இது X-கதிர், புற ஊதாக் கதிர், ஒளியியல் நிறமாலைப் பட்டைகளில் வான் பொருட்களை ஆய்வு செய்த முதலாவது அர்ப்பணிக்கப்பட்ட இந்தியத் திட்டமாகும்.
  • ஆஸ்ட்ரோசாட்டின் படத் தெளிவுத் திறனானதுகேலக்ஸ்எனப்படும் நாசாவின் பட தெளிவுத் திறனை விட மூன்று மடங்கு சிறந்ததாகும்.
  • ஆஸ்ட்ரோசாட் வெற்றியின் மூலம், வான்வெளியை அடிப்படையாகக் கொண்ட ஆய்வகங்களைக் கொண்ட பிரத்தியேக நாடுகளின் பட்டியில் இந்தியாவும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்